கோவில்பட்டியில் வயர், காப்பர் பைப் திருட்டு சம்பவத்தில் ஒருவர் கைது
கோவில்பட்டி மாதவன் கோயில் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் மின் வயரிங் பணிகள் முடிக்கப்பட்டிருந்தன.
இதை தொடர்ந்து அங்கு மீதமிருந்த சுமார் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மின் வயர்கள் மற்றும் ரூ.35,000 மதிப்பிலான ஏசி காப்பர் பைப்புகள் திருட்டு போய் விட்டதாக கட்டிட உரிமையாளர் அசோக்குமார் புகார் அளித்தார்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுப்பிரமணியபுரம் முதல் தெருவைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது,







