தூத்துக்குடி மாவட்டத்தில் 12,597 பேர் குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதுகிறார்கள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
டி.என்.பி.;எஸ்.சி. குரூப்-2 தேர்வு நாளை நவம்பர்1 ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 12,597 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 47 தேர்வு மையங்கள்: அமைக்கப்பட்டுள்ளன,
தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய நான்கு வட்டங்களில் டி.என்.பி.;எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் நடைபெற உள்ளன.

வட்ட வாரியான தேர்வு மையங்கள் மற்றும் தேர்வர்கள்: எண்ணிக்கை விவர்பாம் வருமாறு:-
– தூத்துக்குடி – 24 மையங்கள்; 6,619 தேர்வர்கள்
– கோவில்பட்டி – 13 மையங்கள்; 3,667 தேர்வர்கள்
– திருச்செந்தூர் – 8 மையங்கள்; 1,766 தேர்வர்கள்
– ஸ்ரீவைகுண்டம் – 2 மையங்கள்; 545 தேர்வர்கள்
:தேர்வு நாளன்று காலை 9 மணிக்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும். 9 மணிக்குப் பிறகு வருபவர்களுக்கு அனுமதி இல்லை.
செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,.. கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த அனுமதி. அளிக்க்ப்படுள்ளது, தேர்வர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.







