கோவில்பட்டியில் நாய், மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Oplus_16908288

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளன.ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

அதே போல் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.
எனவே நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் க. தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், எச். எம். எஸ்.வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், ஐ. என். டி. யு. சி. ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் போராட்ட குழுவினர் நகராட்சி பொறியாளர் சேர்மக்கனியை சந்தித்து, கோவில்பட்டியில் தெருநாய்கள் மற்றும் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.







