கோவில்பட்டியில்சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான பெண்கள் ஆக்கி போட்டி
Oplus_16908288



கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பாக தென் மண்டல அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான பெண்கள் ஆக்கி போட்டி இன்று 28ந் தேதி தொடங்கியது.
30 8 2026 வரை கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்திலும் மற்றும் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்திலும் போட்டிகள் நடக்கின்றன.

இன்று காலை 10 மணி அளவில் நடந்த துவக்க விழாவில் தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோசப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்
இப்போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார், ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் இருந்து சிபிஎஸ்சி பள்ளிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன மொத்தம் 22 பள்ளிகளில் இருந்து 26 அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன இப் போட்டிகள் நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டு அரை இறுதிக்கு தகுதி பெரும் அணிகள் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் நான்கு இடங்கள் தீர்மானிக்கப்படும்.
தெலுங்கானா, மாநிலத்தில் இருந்து டெல்லி பப்ளிக் பள்ளி 5-0 என்ற கோல் கணக்கில் ஓசூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியை வெற்றி பெற்றது.
சென்னை பி எஸ் பி பி பள்ளி 3-0 என்ற கோல் கணக்கில் எஸ் பி ஓ ஏ மதுரை அணியை வெற்றி பெற்றது.
வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சாரதா பள்ளி 14-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ அம்பாள் பள்ளியை வெற்றி பெற்றது
இன்னொரு ஆட்டத்தில் அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியை வெற்றி பெற்றது
போட்டிகளுக்கு ஆய்வாளராக இளையராஜா, டெக்னிக்கல் டெலிகட்டாக ரவிச்சந்திரன் செயல்படுகின்றனர் போட்டிகளின் இயக்குனராக திருச்செல்வம், நடுவர்களின் மேலாளராக சரவணன், நடுவர்களாக சண்முக பிரியா, ஸ்ரீ நிஷா, தனுஜா, நிகிதா, தீபா, விக்டோரியா, நிகிர்தா, லாவண்யா, மதன் குமார், வேல்முருகன், காளிதாஸ், ஆகியோர் பணியாற்றினர்

போட்டி துவக்க விழாவில் பள்ளியின் தாளாளர் வீரவேல் முருகன், பள்ளியின் இயக்குனர் விஜயராணி நாகமுத்து,முதல்வர் ஜன்னத் நிசா உசைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்தர், வீரா, ஜெய் கணேஷ் , மாரியப்பன் மதனா ஆகியோர் செய்து வருகிறார்கள்







