கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் வருடாபிஷேகம்; கோபுர கலசங்களுக்கு பூஜை
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட
பத்திரகாளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10. மணிக்குள் நடைபெற்றது,

இதையொட்டி பக்தர்கள் திரண்டிருந்தனர், குறிப்பிட்ட நேரத்தில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம்,\ நடைபெற்றது.
மேலும் மகா கணபதி ஹோமம், சக்தி ஹோமம்,பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்த்ர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூரணாகுதி, அபிஷேகம் கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்கள் அபிஷேகம், மூலஸ்தான கும்ப அபிஷேகம். தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். நடந்தது.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பூசைப்பொருட்கள், யாகசாலை பொருட்கள மற்றும் அபிஷேக பொருட்கள் பயன்படுத்தப்பட்டன, பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு அன்னை பத்திரகாளியம்மனை தரிசித்தனர். தூத்துக்குடி செல்வம் பட்டர் வருடாபிஷேக பூஜைகளை நடத்தினார்.
மதியம் 12 மணிக்கு மேல் கோவில் எதிர்புறம் உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் அன்னதானம் தொடங்கியது. இரவு 7 மணி அளவில் பத்திரகாளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா முதல் நாள் மண்டகப்படிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள் சார்பில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் பத்திரகாளியம்மன் திருவீதி உலா வருதல். நடைபெற இருக்கிறது.

விக்ன விநாயகர் கோவில்
கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்பு பகுதியில் உள்ள விக்ன விநாயகர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வருடாபிஷேக விழா நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது, 7.45 மணிக்கு கோபுர கலசத்திற்கு அபிஷேகம் அதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு நடத்தினார்கள்/. இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







