தென் மண்டல சி பி எஸ் இ. பள்ளி மாணவிகளுக்கான ஆக்கி போட்டி: முதலிடம் பெற்ற 3 அணிகள்
Oplus_16908288
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பில் தென்மண்டல அளவிலான பெண்கள் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி கடந்த 28 ந் தேதி தொடங்கியது.
இன்று 3வது நாளாக கோவில்பட்டி செயற்கை புல் ஆக்கி மைதானம் மற்றும் வேல்ஸ் பள்ளி மைதானத்திலும் போட்டிகள் நடந்தன.
காலை 6.30 மணி அளவில் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை ஐ சி எப் பள்ளியை வெற்றி பெற்றது .

காஞ்சிபுரம் பி எஸ் பி பி பள்ளியும் அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான நடைபெற்ற போட்டியில் கோல் எதுவும் இன்றி சம நிலையில் முடிவு பெற்றதால் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
14 வயதுக்குட்பட்டோருக்கான லீக் போட்டியின் முடிவில் கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும் அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளி 4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், காஞ்சிபுரம் பி எஸ் பி பி அணி 2 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தையும் சென்னை ஐ சி எப் பள்ளி 1 புள்ளி பெற்று நான்காவது இடத்தையும் பெற்றன.
செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சென்னை வேலம்மாள் பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியை வெற்றி பெற்றது.
இன்னொரு ஆட்டத்தில் நெய்வேலி ஜவகர் பள்ளி 6-0 என்ற கோல் கணக்கில் சென்னை பி எஸ் பி பி அணியினரை வெற்றி பெற்றனர்.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கோயம்புத்தூர் அத்தியாயனா பள்ளி 4 -1 என்ற கோல் கணக்கில் அரியலூர் ராம்கோ பள்ளியை வெற்றி பெற்றது.
காலையில் கடைசி போட்டியாக மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி 10- 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத்தில் உள்ள ஹைதராபாத் பப்ளிக் பள்ளியை வெற்றி பெற்றது.
17 வயதிற்குட்பட்டோருக்கான லீக் போட்டியின் முடிவில் மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்றது. கோயமுத்தூர் அத்தியாயன பள்ளி 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. 3 புள்ளிகள் பெற்று அரியலூர் ராம்கோ பள்ளி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது அனைத்து லீக் போட்டிகளிலும் தோல்வியை தழுவிய ஹைதராபாத்தில் உள்ள ஹைதராபாத் பப்ளிக் பள்ளி நான்காவது இடத்தை பெற்றது.

19 வயது உட்பட்டோருக்கான போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி அணி 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும் நெய்வேலி ஜவகர் அணி 6 புள்ளிகள் பெற்றுஇரண்டாவது இடத்தையும் ஹைதராபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி 3 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தையும் சென்னை பி எஸ் பி பி பள்ளி புள்ளிகள் எதுவும் இன்றி நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.
பள்ளியின் தாளாளர் நாகமுத்து தலைமை தாங்கினார் பள்ளியின் முதல்வர் ஜன்னத் நிஷா ஹுசைன், மெண்டார் சோபியா லூயிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தேர்வு குழு தலைவர் குருசித்திர சண்முக பாரதி, ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா போட்டியின் ஆய்வாளர் இளையராஜா போட்டியின் இயக்குனர்கள் திருச்செல்வம் சரவணக்குமார் விழாவில் கலந்து கொண்டனர்..
போட்டிகளின் நடுவர்களாக மதன்குமார், காளிதாஸ், வேல்முருகன், எல்பின் சஞ்சய், சண்முகப்பிரியா, விக்டோரியா, நிகிரிதா,லாவண்யா ஆகியோர் பணியாற்றினர் போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்தர் மாரியப்பன் ஜெய் கணேஷ் வீரா மதனா ஆகியோர் செய்திருந்தனர்







