கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட 12 ஊராட்சிகளுக்கு செயலர்கள் நியமனம்
இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட நிலையில்.. அந்த ஊராட்சிகளின் உள்ளாட்சி பதவிகள் வரும் 20 தேதி முடிவடைவதால் இந்த ஊராட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி அதனை கண்காணிப்பதற்கு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பாக கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) இரா.முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், வெங்கடாச்சலபுரம், இளையரசனேந்தல் மற்றும் ஜமீன் தேவர்குளம் ஆகிய 12 கிராம ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

மேலும் மேற்படி ஆணையானது தென்காசி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது. தற்போது தென்காசி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான பதவிக்காலம் 19.10.2026 அன்று முடிவடைகிறது. எனவே, 20.10.2026 முற்பகல் முதல் தனி அலுவலர் (special officer) பதவிக்காலம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாலும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கீழ்க்காணும் விபரப்படி கிராம ஊராட்சிகள் பொறுப்பு நிர்ணயம் செய்து இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.
ஒதுக்கீடு செய்யப்படும் கிராம ஊராட்சிகளின் விபரம்

எனவே 20.10.2026 முதல் மேற்குறிப்பிட்டுள்ள கிராம ஊராட்சிகளின் வரவு செலவு பொறுப்புகளை பெற்றுக் கொண்டு திட்டப்பணிகளை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) இரா.முத்துக்குமார் தெரிவித்து உள்ளார்,







