போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி


தென் மண்டல காவல்துறையின் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மதுரை மற்றும் திருநெல்வேலி சரகங்களில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி சரக மூத்த காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய்., தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ரா. சிவபிரசாத் , தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . அசோக்குமார் மற்றும் திருநெல்வேலி சரகத்தைச் சேர்ந்த காவல் உதவி கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட மூத்த காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவு இப்பிரிவில், திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பிஸ்வஜித் பாண்டா முதல் இடத்தையும், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர். அன்ஜித் நாயர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இன்சாஸ் (INSAS) பிரிவு:
இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டியில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர். தேஷ்முக் சேகர் சஞ்சய் முதல் இடத்தையும், திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர். பிஸ்வஜித் பாண்டா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர். அன்ஜித் நாயர். மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திருப்பதி ஆகியோர் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
ரிவால்வர் (REVOLVER) பிரிவு
ரிவால்வர் துப்பாக்கி சுடும் போட்டியில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு முதல் இடத்தையும், திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர். பிஸ்வஜித் பாண்டா இரண்டாம் இடத்தையும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர. அசோக்குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு கோப்பைகள், கேடயங்கள், மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.







