தேமுதிக ஆண்டு விழா: மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
Oplus_16908288
தேசிய முற்போக்கு திராவிட கழகம் 22ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் விஜயாபுரியில் மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் விஜயாபுரி மணிகண்டண் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர் முருகன் முன்னிலையில் கழக தலைவர் விஜயகாந்த் உருவப் படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சுரேஷ் கழக கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.
செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன், விஜயாபுரி செல்லமுருகன், போத்திராஜ்,கமலேஷ், ராகவன், மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







