மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிவிட்டு தலைமை செயலக புதிய கட்டிடம் தேவையா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. இந்த உலகம் உள்ளவரை அதிமுகவை யாராலும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது. அண்ணா காட்டிய வழியில் மக்கள் ஆதரவோடு அதிமுக என்றும் நிலைத்து நிற்கும். சென்னை பட்டினம்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதியதலைமைச்செயலகம் கட்டும் அரசின் திட்டத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்,
மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிவிட்டு இந்தப் புதிய கட்டிடம் தேவையா? லூப் சாலை மற்றும் சாந் தோம் பகுதிகளில் 25 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் தலைமைச் செயலகம் வந்தால், ஒட்டுமொத்தப்போக் குவரத்தும் முடங்கும். கலங்கரை விளக்கம் மற்றும் கிரீன்வேஸ் சாலைகளில் பேரிகார்டு போட்டு அடைத்துவிடுவார்கள். நீதிபதிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அவதிப்படுவார்கள்.

25 ஏக்கரில் தலைமைச் செயலகம் கட்டுவதை விடுத்து, மக்கள்நடமாட்டம் குறைவான கிண்டி ராஜ்பவன் சாலை அல்லது சென்னைபுறநகர்ப் பகுதிகளில்அனைத்துவசதி களுடன் கூடிய ஒருங்கி ணைந்த வளாகமாக இதைக்கட்டலாம்.
மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி இங்குத்தலைமைச் செயலகம் கட்டினால், அதுவும் ஓமந்தூரார் வளாகத் தைப்போல மல்டிஸ்பெஷாலிடி மருத்துவமனையாகத்தான் மாறுமே தவிர, தலைமைச் செயலகமாகச் செயல்படாது.
மேலும், “பள்ளிகளில் குடிநீருக்கே வழியில்லாத நிலையில், 1,200 கோடி வரிப்பணத்தை ஆடம்பரக் கட்டிடங்களுக்குச் செலவிடுவது நியாயமா?
தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேட்டி அளிக்கும் போதே மின்சாரம் துண்டிக்கப்படுவதுதான் இந்த ஆட்சியின் அவலநிலை. மத்திய அரசிடம் பேசி கூடுதல் மின்சாரம் பெற்று சீரான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகள் எப்போதும் அதிமுகவின் கோட்டைகள் மக்களின் பேராதரவோடு வரும் தேர்தல்களில் அங்கு அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும்.
இவ்வாறு டி,ஜெயக்குமார் கூறினார்,.







