விநாயகர் சதுர்த்தி: கோவில்பட்டியில் பால்குட ஊர்வலம்
Oplus_16908288

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று கோவில்பட்டி மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ளஉள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பால்குடம் ஊர்வலம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்பட்டி ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
108 பால்குட ஊர்வலம்
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு கதிர்வேல் நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவில் 11ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ம் தேதி நாட்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விநாயகர் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், துர்கா, நவகிரக, சுதர்சன, காயத்ரி ஹோமங்கள் நடந்தன.
அதன் பின்னர், 108 பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை கோவில்பட்டி மத்திய ஒன்றிய அ.தி.மு.க., செயலாளரும், கோவில்பட்டி யூனியன் முன்னாள் துணைச் சேர்மனுமான பழனிசாமி தொடக்கி வைத்தார்.

காமராஜர் நகரில் உள்ள கருமாரியம்மன் கோவில் முன்பிருந்து தொடங்கிய
ஊர்வலம், மந்தித்தோப்பு ரோடு வழியாக சக்தி விநாயகர் கோயில் சென்றடைந்தது. பின்னர் சக்தி விநாயகருக்கு பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு சக்தி விநாயகர் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் தங்கராஜ், மாரிராஜ், பொன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
அன்னதானம்
கோவில்பட்டி கடலையூர் ரோடு, சண்முகா நகர் [வடக்கு] வரசக்தி விநாயகர் கோவில் கிங் மேக்கர் இளைஞர் அணி நடத்தும்
25-ஆம் ஆண்டு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில் காலையில் கணபதி ஹோமம்
நடைபெற்றது.

தொடர்ந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு அபிஷேகப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
காலை 8 மணி முதல்
10 மணிக்குள்
மூக்கரை விநாயகர் கோவிலில் இருந்து
செண்டை மேளம் முழங்க நமது
வரசக்தி விநாயகர் பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
பால்குடம் ஊர்வலத்தை தொடங்கி வைப்பவர்கள்
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கம் பேரமைப்பு மேற்கு மாவட்டத் தலைவர் பி. தங்கமணி தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து பகல் 12 மணி முதல் அன்னதானம் நடைபெற்றது.
அன்னதானத்தை ஜி. எம்.சிங்கராஜ் தொடங்கி வைத்தார்.
கழுகுமலை
கழுகுமலை பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் உள்ள செந்தில் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர் பக்தர்களுக்கு பிரசாதமாக கொழுக்கட்டை,சுண்டல்,சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி க்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகி மா.கணேசன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.







