புகையிலை பொருட்களை காரில் கடத்தியவர் கைது
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (29.5.2022) கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அம்மாசி மகன் கார்த்திக்ராஜ் (33) என்பவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் கடத்தியது தெரியவந்தது.
உடனே கார்த்திக்ராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 3 ஆயிரம் மதிப்புள்ள 20 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.