• May 5, 2024

`டான்’ வெற்றி: சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு

 `டான்’ வெற்றி: சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றடான்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டியதாக லைகா நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே `டான்’ பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *