எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி

அதிமுக பொதுச்செயலாளர்,முன்னாள் முதலமைச்சர்,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன்,பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் விஜய பாண்டியன்,ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி,போடுசாமி,அன்புராஜ்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,நகர அவைத்தலைவர் அப்பாசாமி,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன்,நகர்மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி,வக்கீல் ஈஸ்வரமூர்த்தி,அதிமுக நிர்வாகிகள் மாரிமுத்து பாண்டியன்,இந்திரன்,விஜயராஜ்,மாரியப்பன்,வேல்ராஜ்,வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
