டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முழு மாதிரித்தேர்வுகள் இலவசம்; ஆன்லைனில் எழுதலாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
போட்டித் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் “டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 பிரிலிம்ஸ் -2025” தேர்வுக்கு இலவசமாக மாநில அளவிலான 2 – முழு மாதிரித்தேர்வுகள் (Online Test) – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் Virtual Learning Portal (www.tamilnaducareerservices.tn.gov.in ) வாயிலாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் முழுமாதிரி தேர்வு 15.5.2025 (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் ஆன்லைனில் தேர்வினை எழுதிக் கொள்ளலாம்.
இந்த ஆன்லைன் தேர்வை தங்களின் தொலைபேசி ( Smart Phone) மற்றும் கணினி வாயிலாக எழுதி கொள்ளலாம்.

இந்தத் தேர்வில் கலந்து கொள்ள தாங்கள் Virtual Learning Portal-லில் Candidate Registration என்பதை கிளிக் செய்து User Name, Password கொடுத்து பதிவு செய்து கொள்ளவும். பின்னர் அதை லாகின் செய்து முகப்பு பகுதியில் மாதிரி தேர்வு என்பதை கிளிக் செய்யவும் New என்று Blink ஆகிக்கொண்டிருப்பதை கிளிக் செய்யவும். View Assesment ஐ தொடவும். அனைத்து மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்.
தேர்வு முடிந்தவுடன் உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான விடையை தெரிந்து கொள்ளலாம். மேலும் Answer with Explanation download செய்து தெரிந்து கொள்ளலாம்.

தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழ்காணும் ஆன்லைன் படிவத்தை 14.5.2025 தேதிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள்.
https://forms.gle/JrC8paL7AnLfzVp37
