தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, மருத்துவ துறையில் 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவை புரிந்த செவிலியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உள்புற நோயாளிகளை உடனிருந்து பராமரித்துக் கொள்ளும் நபர்கள் தங்குவதற்காக ரூ 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைக் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.


