கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
கோவில்பட்டி ஸ்ரீ ராக வேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு கோவில் முன்பு அன்னதானம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.. அதன்படி 45 வது மாதம் அன்னதானம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்றது..
அறக்கட்டளை செயலாளர் ஜோதி காமாட்சி வரவேற்றார். தூத்துக்குடி டி.எஸ்.பி.சால்ட் அதிபர் பெரிய சுவாமிநாதன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சக்தி முருகன், மதுரை காய்கனி கடை அதிபர் சண்முகராஜ்.. ஓம் சக்தி லேத் ஒர்க்ஸ் முத்துமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் யமுனா, தொழில் அதிபர் சக்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர், பொங்கல் பிரசாதம் மற்றும் அன்னதானத்தை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை டாக்டர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.,
ஸ்ரீ ராக வேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர் லவராஜா, தொழிலதிபர்கள் நடீராஜன், கொல்லம் சேகர், பஜ்ரங் நர்த்தனா]லையா கணபதி, தொழிலதிவர். கே. பாலகிருஷ்ணன்.. கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி, மிலிட்டரி சந்திரசேகர், ஆசிரியர் ஜீவானந் தம், பில்டிங் காண்ட்ராக்டர் அழகுமுத்து, பசுமை இயக்கம் செந்தில், ஆசிரியை ஆனந்தவல்லி சீனிவாசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினரும், ரியல் எஸ்டேட் அதிபருமான மாரிமுத்து நன்றி கூறினார்.









