தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி தேர்வு; கோவில்பட்டியில் 15-ந்தேதி நடக்கிறது
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் வேலூர் மாவட்ட ஆக்கி சங்கம் சார்பாக வேலூரில் வருகிற மே 19 முதல் 23ஆம் தேதி வரை மாநில சப் ஜூனியர் சாம்பியன் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆக்கி அணி தேர்வு 15.5.2025 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் நடக்க உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் 1.1.2009 க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவராகவோ அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியில் பயின்று வருபவராகவோ இருக்க வேண்டும் .
மாவட்ட ஆக்கி அணி தேர்வில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் ஆதார் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல், புகைப்படம், கொண்டு வர வேண்டும் மேலும் விவரங்களுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முகம் பாரதியை (தொலைபேசி எண் 9443190781) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









