கோவில்பட்டி அரசு கல்லூரியில் மகளிர் விடுதி; கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு கலைக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதி திறப்பு விழா நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி எம்பி கனிமொழி பங்கேற்று சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ராமராஜ்,தாசில்தார் சரவணபெருமாள், திமுக ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,அரசு வழக்கறிஞர் ராமச்சந்தின்,மாவட்ட பிரதிநிதிகள் முருகன்,அசோக்குமார்,மாரீஸ்வரன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,தகவல் தொழில்நுட்ப அணி பழனிக்குமார்,மாணவரணி தாமோதரக்கண்ணன்,அயலக அணி சுப்பராயன்,தொமுச நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கிளவிபட்டி கிராமத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கனிமொழி எம்;பி.அடிக்கல் நாட்டினார்.

