கோவில்பட்டியில் கோடைகால ஆக்கி பயிற்சி முகாம்

கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக ஆண்டுதோறும் கோடைகால மற்றும் குளிர்கால ஆக்கி பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாம் 11 -ந்தேதி தொடங்கியது. கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் 20 5 2025 வரை நடக்கும் இந்த பயிற்சி முகாமில் மொத்தம் 50 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை பயிற்சி முகாம் நடக்கிறது.

தினமும் வீரர்களுக்கு பால், முட்டை, பழம், பயிர் வகைகள் வழங்கப்படுகிறது. முன்னாள் இந்திய ஆக்கி வீரர்கள் முகமது ரியாஸ், அஸ்வின், மாரீஸ்வரன், போன்றோர் பயிற்சி அளிக்கிறார்கள். கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி பயிற்சியாளர் முத்துக்குமார், மனநல மருத்துவர் பாலாஜி, முன்னாள் ராணுவ வீரர்கள் பொன்ராஜ், காளிதாஸ், தனசேகரன், ஆகியோர் கோல்கீப்பர், தடுப்பு ஆட்டக்காரர், முன்கள ஆட்டக்காரர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் முறையாக அளிக்க உள்ளார்கள்.
பயிற்சி முகாமில் தலைமை பயிற்சியாளராக வேல்முருகன் செயல்பட்டு வருகிறார். பயிற்சி முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூக்துக்குடி மாவட்ட ஆக்கி யூனிட் ஆப் செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி, ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக தலைவர் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோர் செய்து வருகிறார்கள்


