தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் 16ம் தேதி நடக்கிறது; கீதாஜீவன் அறிக்கை

அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்குகிறார். திமுக துணை பொதுச்செயலாளரும், பாராளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி கருனாநிதி எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்த இந்த கூட்டத்திற்கு மாநில அணி துணைச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பகுதி பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கீதா ஜீவன் கூறி உள்ளார்.


