ஓட்டப்பிடாரம் தொகுதியில் நூலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னை இந்திரா நகர் பகுதி தனசேகர் நகரில் தூத்துக்குடி மாநகராட்சி நூலகவரி நிதியின் கீழ் 9. 85 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள நூலக கட்டிடத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர். கனிமொழி அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சண்முகையா மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையாளர். மதுபாலன் அன்னை இந்திரா நகர் பகுதி கழக செயலாளர் சிவக்குமார் 2-வது வார்டு வட்ட செயலாளர் . கார்த்திக், பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் பவுவுசியா அபுதாகிர், 1-வது வார்டு வட்ட செயலாளர்.ராஜன் இளைஞர் அணி பூவேஸ்நாதன் 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







