காப்பீட்டு திட்டத்தை அரசே நடத்த வேண்டும்; அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கோவில்பட்டி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியர் சங்க வட்டத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் சின்னதம்பி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
வட்ட துணைத் தலைவர் மகேஸ்வரன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்ட இணைச் செயலாளர் ஜோதிபாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:-
*காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
*ஓய்வூதியர்களை சார்ந்துள்ள பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
*கட்டணமில்லா கிசிச்சையை உறுதிப்படுத்த வேண்டும்.
*பேக்கேஜ் திட்டத்தை கைவிட வேண்டும்.
*உச்ச வரமின்றி செலவுத் தொகை முழுவதையும் வழங்க வேண்டும்.

*அங்கீகரிக்கப்படாத நோய் மற்றும் மருத்துவமனை என்ற பாகுபாடுகளை களைய வேண்டும். *மருத்துவமனைகளில் முன்தொகை வசூல் செய்வது தடுக்கப்பட வேண்டும்.
*அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த திட்டத்துக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தொடங்க வேண்டும்.
*மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.







