கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பொங்கலிடுதல்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் ஒவ்வொரு மண்டகபபடிதாரர்கள் சார்பில் மாலைவேளையில் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், திருவீதி உலா வருதல் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் 9 வது நாளான நேற்று காலையில் தெற்கு நந்தன்வனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். காலை 10 மணிக்கு கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது, மாலை 5 மணிக்கு பெண்கள் கையில் மாவிளக்கு ஏந்தி ஊர்வலம் வந்தனர். 5.30 மணிக்கு பக்தர்கள் பலர் வேண்டுதல் பூச்சட்டிகள் எடுத்து வந்தனர். 21 அக்னிச்சட்டி 54 அக்னிச்சட்டிஎடுத்து பக்தர்கள் நகர்வலம் வந்தனர். இக்காட்சி பிரமிக்க வைத்தது.

இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் வெள்ளி குடையின் கீழ் தங்கக்குடம், வாளி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது.இரவு 8 மணிக்கு நெல்லை கவிதா தொகுத்து வழங்கிய இன்னிசை கச்சேரி நடந்தது.
பொங்கலிடுதல்
விழாவின் 10 ம் நாளான இன்று(புதன்கிழமை) காலை பொங்கல் விழா நடைபெற்றது. அதிகாலை நேரத்தில் தெற்கு நந்தவனம் சென்று புனிதநீர் கொண்டு வந்து கோவில் முன்பு பக்தர்கள் ஏராளமானவர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார்கள். மாலையில் கோவில் முன்பு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் திருப்பல்லக்கில் கொவிலியி சுற்றி வருதல், பின்னர் முளைப்பாரி நந்தவனம் கொண்டு சேர்த்தல் நடைபெற இருக்கிறது.

நாளை(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் தென்காசி வெற்றிக்குமார் பரம்பரை புவனா குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.
நாளையும்(15-ந்தேதி) நாளை மறுநாளும்(16-ந்தேதி) மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. பூஜை டிக்கெட்டுகள் சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

1008 திருவிளக்கு பூஜை
மறுநாள் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்களும் மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை தடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனி செல்வம். உப தலைவர் செல்வராஜ். செயலாளர் ஜெயபாலன். பொருளாளர் சுரேஷ்குமார், உறுப்பினர்கள், ராஜேந்திர பிரசாத் சின்ன மாடசாமி, செல்வராஜ் பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன். செயலாளர் மாணிக்கம், பொருளாளர் மகேஷ்.. உறுப்பினர்கள் பாலமுருகன். முத்துராஜ்,சௌந்தரபாண்டியன், மணிக்கொடி உள்ளிட்டோர் செய்துள்ளனர்,

