ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
* ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் அரிய கனிம வளத்திட்டங்களை செயல்படுத்த ரூ.16,300 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
* உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடியில் செமிகண்டக்டர் ஆலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது


