• May 5, 2024

கட்டுரை போட்டி: கல்லூரி மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்

 கட்டுரை போட்டி: கல்லூரி மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பாக உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு “தற்கால உணவு முறையும் ஆரோக்கியமும்” என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்ற மாணவிகளின் படைப்புகளை நடுவர் குழுவினர் ஆய்வு செய்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். இளம் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். நர்கீஸ் பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *