• May 19, 2024

கருணாநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்- கீதாஜீவன்

 கருணாநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்- கீதாஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,’
கூட்டத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பேசினார்.. அவர் கூறியதாவது:-
கடந்த தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்து கலைஞர் புதிய தலைமை செயலகத்தை தனது நேரடி பார்வையில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கட்டினார். அப்பகுதியில் பெரியார், அண்ணா, சிலைகளுக்கு மத்தியில் இரண்டு தினங்களுக்கு முன்பு முழு உருவ வெண்கல சிலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி பார்வையில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாளை வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும். அண்ணா மறைவுக்குப்பின் அவர் வழி தொட்டு இயக்கத்தை கட்டிக்காத்தவர் கலைஞர். இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்தபோதேல்லாம் அதை தகர்த்தெறிந்து 13 முறை சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்று 5 முறை தமிழக முதலமைச்சராக பணியாற்றி பல்வேறு திட்டங்களை தந்து தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர்.
சமூகநிதி சமச்சீரான வளர்ச்சி சமஉரிமை இவற்றை அடித்தளமாக கொண்டு திராவிட மாடல் ஆட்சியை நடத்தியவரும் தமிழக மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காவும், அல்லும் பகலும் அயராது தனது இறுதிகாலம் வரை உழைத்தவர் கலைஞர் கருணாநிதி.
இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய பகுதி வார்டு மற்றும் கிளைக்கழகங்கள் தோறும் கலைஞர் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியும், தி.மு.க. கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், கழக கொள்கை பாடல்களை ஒலிபரப்பியும், ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி உற்சாகமாக கொண்டாட வேண்டும் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து முதியோர். அனாதை இல்லங்களுக்கு உணவுகள் வழங்கி மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *