• May 19, 2024

தூத்துக்குடியில் நடைபாதையில் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம்: மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. வெளிநடப்பு

 தூத்துக்குடியில் நடைபாதையில் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம்  நிர்ணயம்: மாநகராட்சி  கூட்டத்தில் அ.தி.மு.க. வெளிநடப்பு

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் இன்று காலை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
35வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரும், மாமன்ற எதிர்கட்சி தலைவருமான வீரபாகு பேசுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இதனால் மக்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர்.
அதிலிருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில் தற்போது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தூத்துக்குடி மக்களை மிகவும் பாதிக்கும் வகையில் தீர்மானம் 26ல் குறிப்பிட்டுள்ள வி.இ சாலை, பாளை ரோடு, ஜெயராஜ் ரோடு, அண்ணாநகர் பிரதான சாலை, சிதம்பர நகர் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் நடைபாதையில் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டண தொகை நிர்ணயம் செய்யும் தீர்மானத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறி விட்டு மாமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க .கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து மற்றும் 4 கவுன்சிலர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு சேய்தனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *