• April 27, 2024

துபாயில், 2 ஆண்டுக்கு பிறகு தீனிசைப் பாடல்கள் நிகழ்ச்சி

 துபாயில், 2 ஆண்டுக்கு பிறகு தீனிசைப் பாடல்கள் நிகழ்ச்சி

துபாயில் தீனிசைப் பாடல்கள் நிகழ்ச்சி துபாய் தேரா நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஓட்டலில் நடந்தது. முஹிப்புல் உலமா கீழை ஏ. முஹம்மது மஹ்ரூப் தலைமை தாங்கினார். ஜலால் இறைவசனங்களை ஓதினார்.
ஈமான் சங்க தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாகான் முன்னிலை வகித்தார்.
கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவன தலைவர்
முனைவர் ஆ. முகம்மது முகைதீன், பாடகர் நாகூர் நவுசாத் அலி குறித்த அறிமுக உரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நாகூர் நவுசாத் அலி, மறைந்த பாடகரும், அவரது தந்தையுமான நாகூர் இ.எம். ஹனிபா பாடிய தீனிசைப் பாடல்களை பாடினார். கொரோனா பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகளாக இத்தகைய
பாடல் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சமூக ஆர்வலர் கீழை ஏ. முகம்மது மக்ரூப் தனது பள்ளிக்கூட தோழர் நாகூர் நவுசாத் அலியுடன் இணைந்து 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து ‘ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்’ என்ற பாடலை பாடியது மலரும் நினைவாக அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பாலைவன மணற்துகள்கள்’ என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது.


பாடகருக்கு கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்த நூலை ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் அறிமுகம் செய்தார். இளையான்குடி அபுதாஹிர், கீழக்கரை சலீம் காக்கா, கோவிந்தகுடி முஹம்மது இஸ்லாமியில், சர்வதேச வர்த்தக குழுமத்தின் அன்வர், ஷாநவாஸ், ராஜா, இலங்கை மவுலவி சுபையிர் அஹில் முஹம்மது, அல் அய்ன் இப்ராஹிம், காயல்பட்டணம் அஹமது சுலைமான், வழுத்தூர் மொஹிதீன் பாட்சா உள்ளிட்டோர் அந்த நூலை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் லேண்ட்மார்க் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா, கோவிந்தகுடி சேட், அதிரை அப்துல்லா ஹஜ்ரத், அதிரை ஷேக் தாவூத் ஹஜ்ரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *