• March 6, 2026

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ; 31 மற்றும்  1ம் தேதி நடக்கிறது

 தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ; 31 மற்றும்  1ம் தேதி நடக்கிறது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டம், இணைந்து முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026  என்ற பெயரில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது.

31.1.2026 அன்று கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்), எறிபந்து (பெண்கள் மட்டும்) ஆகிய போட்டிகள் நடக்கிறது, 

1.2.2026 அன்று தடகளம் – 100 மீ மற்றும் குண்டு எறிதல், ஓவியம், கோலப் போட்டிகள் மற்றும் உடல்சார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், பார்வைசார் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல், அறிவுசார் மாற்றத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், அதே போன்று செவிசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் ஆகிய போட்டிகள் நடக்கின்றன,

இந்த போட்டிகள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில்  காலை 7 மணி முதல் நடைபெறும்

ஊராட்சி ஒன்றிய அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மற்றும் கோலப் போட்டிகள் மற்றும் உடல்சார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், பார்வைசார் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல், அறிவுசார் மாற்றத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், அதே போன்று செவிசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்போர் நேரடியாக கலந்து கொண்டு பயனடைய தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *