அகில இந்திய ஆக்கி போட்டி: 4-வது இடம் பிடித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணிக்கு கோவில்பட்டியில் வரவேற்பு
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்திலும் போரூர் ராமச்சந்திரா செய்கை புல் ஆக்கி மைதானத்திலும் 7 நாட்கள் நடந்தன.
சத்தியபாமா பல்கலைக்கழகம் போட்டியை நடத்தியது இப்போட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி கலந்து கொண்டு விளையாடியன பெண்கள் அணி கால் இறுதிப் போட்டியில் மைசூர் பல்கலைக்கழக அணியிடம் தோல்வி கண்டது.
ஆண்கள் ஆக்கி அணி அரை இறுதி லீக் போட்டிக்கு தகுதி பெற்றதுடன் இறுதியில் வெள்ளி பதக்கம் பெற்றது. தொடர்ந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ஜனவரி 22 முதல் 27 வரை நடக்கும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி சம்பல்பூர் பல்கலைக்கழகம் சார்பாக நடைபெற்றது

இப்போட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலந்து கொண்டு ஆடியது,.. லீக் போட்டியில் வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது கால் இறுதி போட்டியில் வாரணாசி மகாத்மா காந்தி காசி பல்கலைக்கழக அணியை 6-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது
பின்னர் அரை இறுதி போட்டியில் சம்பல்பூர் பல்கலைக்கழக அணியிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவி நான்காவது இடம் பெற்றது மேலும் கேலோ இந்தியா பல்கலைக்கழக அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

பல்கலைக்கழக ஆக்கி அணியின் கேப்டனாக நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் அரவிந்தன் , பயிற்சியாளராக முத்துக்குமார், துணை பயிற்சியாளராக காளிமுத்து பாண்டிராஜா, அணியின் மருத்துவராக மருத்துவர் பாலாஜி, அணி மேலாளராக கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் குருசித்திர சண்முக பாரதி செயல்பட்டனர்
அகில இந்திய அளவில் சாதனை படைத்த பல்கலைக்கழக ஆக்கி அணி வீரர்களையும் உடன் பயணித்த பயிற்சியாளர் மற்றும் மேலாளர்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை இயக்குனர் ர் ஆறுமுகம் கே ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற் கல்வி இயக்குனர் ராம்குமார், எஸ் எஸ் துரைசாமி மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவா மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் மாரியப்பன், சுரேஷ்குமார், சுரேந்திரன், ஈஸ்டர், வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி, திருச்செல்வம், சிவானந்த, மாயாண்டி, மணிவண்ணன், மனோஜ் குமார், சுரேஷ்குமார், மற்றும் முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின்மூத்த வீரர்கள் பாராட்டி வரவேற்றனர்.







