தி.மு.க. -காங்கிரஸ் இடையே எந்த மோதலும் இல்லை; கனிமொழி எம்.பி.

2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம், நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இதில் குழு உறுப்பினர்களான அமைச்சர் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், தமிழரசி ரவிக்குமார், கழக செய்தித் தொடர்புச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்தரன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனுக்களைப் பெற்றனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்கங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை குழுவிடம் அளித்தனர்.
தொடர்ந்து, கனிமொழி கருணாநிதி எம்.பி. மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி.கூறியதாவது:-
திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி வருகிறார்கள்.
ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால், அதை நிச்சயமாக நிறைவேற்றக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான்” என்ற உறுதியான நம்பிக்கை மக்களிடையே உள்ளது. அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான் என்ற நம்பிக்கையுடனே மக்கள் மனுக்களை வழங்குகிறார்கள்

, திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறது., எந்தக் கட்சிகள் கூட்டணியில் சேர வேண்டும் என்பது குறித்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார்.. எந்தக் கருத்துக் கணிப்பு வந்தாலும், வராவிட்டாலும், தேர்தல் களம் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதை கண்கூடாகக் காண முடிகிறது .
ராகுல் காந்தியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்ததது., கூட்டணியைத் தாம் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை .. கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறது.,, இரு கட்சிகளுக்கிடையே எந்த மோதலும் இல்லாமல் உறவு சுமூகமாகவே உள்ளது.
இவ்வாறு கனிமொழி கூறினார்,
காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் “தன்மானமே முக்கியம்” என்று பேசியது குறித்த கேள்விக்கு; பதில் அளிக்கையில்,”எல்லாருக்கும் தன்மானம் தான் முக்கியம். சுயமரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது. தன்மானம் முக்கியம் இல்லை என்று யாரும் சொல்லப்போவது இல்லை என்று குறிப்பிட்டார்.







