மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்)
மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல். அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியது,. இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
த.வெ.க. ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே நடைபெற உள்ள இடைத்தேர்தல் என்பதால் ஆட்சியையும், அவர்களின் கொள்கை கோட்பாடுகளையும் அவர்கள் எவ்வாறு செயல்படுத்துகின்றனர் என்பதை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் களமாக பார்க்கப்படுகிறது.

இதனால், இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்பதில் த.வெ.க. தீவிரமாக களப்பணியாற்றி இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளையும் தனதாக்கிக்கொள்ள தீவிரமாக களமாடும். அதேநேரத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களாக தேர்வானவர்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தல் என்பதால் அந்தந்த தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வின் செல்வாக்கை இழக்கக்கூடாது என்ப தில் அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது.
அதேபோன்று, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக முடிவு செய்ய இன்று முக ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடுவது என திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில், திமுக 2ம் இடம் பிடித்து தோல்வி அடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் திமுக 3-ம் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தால் கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்துவிடுவார்கள் எனவும் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் விஜய்க்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால், தேர்தலில் போட்டியிடும் முடிவை திமுக தலைமை எடுத்து உள்ளது,
அதன்படி இரண்டு தொகுதிகளுக்கும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

மதுராந்தகம் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக வக்கீல் ஐ.பரந்தாமன் அறிவிக்கப்பட்டுள்ளார்,.இவர் திமுக சட்டத்துறை இணை செயலாளராக உள்ளார்,
தாராபுரம் (தனி) தொகுதி வேட்பாளராக வக்கீல் எஸ்.சுகன்யா போட்டியிடுவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்,.







