கோவில்பட்டியில் வாயில் கருப்பு துணி கட்டி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பெயர் மாற்றம் செய்ததை கண்டித்தும், இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று, வலியுறுத்தியும் நடந்த ஆற்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி இருநதனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்,

காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி, நகர தலைவர் அருண்பாண்டியன், வட்டார தலைவர்கள், செல்லதுரை, முருகன், மாவட்டபொருளாளர் கார்த்திக் காமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சூப்பராயிலு, ராஜாசேகரன், சண்முகராஜா, மாவட்ட துணைத்தலைவர் அய்யலுசாமி,ராஜாராம்,ஆல்வார்சாமி,எஸ்சிஎஸ்டி பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து, சிறுபான்மையினரின் பிரிவு அருள்தாஸ், விவசாய பிரிவு பேரையா, சேவா தள பிரிவு தலைவர் சக்திவிநாயகம்,மகிளா காங்கிரஸ் மாரியம்மாள், நல்லமதி மற்றும் வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்







