கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் 114 பேருக்கு விலையில்லா மடிக்கணினி

கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக முதல்வரின் உலகம் உன் கையில் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 117 மாணவர்களுக்கு விலையில்லா மடி கணினி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்/ கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

நாடார் உறவின் முறை சங்கப்பொருளாளர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு 117 மாணவர்களுக்கு விலையில்லா மடிகணிணியினை வழங்கினார்.
கல்லூரி துறை தலைவர்கள் விஜயகோபாலன், செல்வ லட்சுமி, கற்குவேல் ராஜன், செல்வம், ரமேஷ், பிரியங்கா, ஆனந்த் குமார், செல்லத்துரை உட்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.







