மினி பஸ்சில் படிக்கட்டு பயணம்: ஆட்டோவில் தலை இடித்து காயம் அடைந்த மாணவருக்கு அமைச்சர் உதவி
கோவில்பட்டியில் மினி பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன, டிரைவர்கள் பலர் யார் எங்கு கையை காட்டினாலும் நிறுத்தி ஏற்றிகொள்வார்கள். மேலும் அதிக பயணிகளை ஏற்றிக்கொள்ள ஒருவரையொருவர் முந்தி செல்வது, அதிவேக பயணம் இதுவெல்லாம் அன்றாட காட்சிகள்.
இந்த நிலையில் இன்று காலை கோவில்பட்டியில் மினி பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால் பள்ளி மாணவர்கள் சிலர், படிக்கட்டில் நின்றபடி பயணம் மேற்கொண்டனர்.

அப்போது சாலை நெரிசலில் ஆட்டோவில் ஒரு மாணவரின் தலை இடித்து கீழே விழுந்தார். உடனே பஸ் நிறுத்தப்பட்டது. மாணவரின் தலையில் இருந்து ரத்தம் சொட்டியது. அந்த சமயத்தில் அமைச்சர் கீதா ஜீவன், நகராட்சி அலுவலகம் நோக்கி காரில் வந்து கொடிருந்தார்.
தலையில் ரத்தகாயத்துடன் மாணவரை கண்டதும் காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கி அந்த மாணவருக்கு உதவினார். காரில் இருந்து துண்டை எடுத்து கொடுத்து தலையில் சுற்றச்செய்து ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அங்கிருந்து அமைச்சர் கீதா ஜீவன் புறப்பட்டு சென்றார். இதற்கிடையே மருத்துவமனையில் அந்த மாணவருக்கு தலையில் கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது,







