கோவில்பட்டியில் 10 ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்; ரோட்டரி சங்கம் வழங்கியது

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சௌபாக்யா மஹாலில் நடந்தது.
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 10 ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன ,கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு எலக்ட்ரிக் பெல் வாங்கிட ரூ 10,000 நிதி உதவி உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பல் பரிசோதனை முகாமில் இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் இப்ராஹிம், பாரத், ஆறுமுகசாமி ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ரோட்டரி வாய்ஸ் மாதாந்திர இதழ் வெளியிடப்பட்டது. பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார், ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வி.எஸ்.எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல் பரிசோதனை முகாமை துவக்கி வைத்து ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின் உள்பட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
மாதாந்திர ரோட்டரி வாய்ஸ் இதழை கண்ணன் வெளியிட ரோட்டரி மூத்த உறுப்பினர் கருப்பசாமி பெற்றுக்கொண்டார்.
பல் மருத்துவர் சுதாகர் 50-க்கும் மேற்பட்டோருக்கு பல் பரிசோதனை செய்தார்.

ரோட்டரி சங்க முன்னாள் உதவி ஆளுநர்கள் முத்துச்செல்வம்,சீனிவாசன்,ஜெயபிரகாஷ் நாராயணசாமி,பரமேஸ்வரன், வி. எஸ்.பாபு, நாராயணசாமி, முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க துணை தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிகளை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார்.







