கோவில்பட்டி பசுமை, தூய்மை இயக்கம் கலந்தாய்வு கூட்டம்
கோவில்பட்டி பசுமை, தூய்மை இயக்கம் சார்பாக கோவில்பட்டி சிதம்பர நாடார் காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொழிலதிபர் ரவி மாணிக்கம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அபிராமி முருகன் வரவேற்று பேசினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார்.

ரோட்டரி சங்க நிர்வாகி விநாயகா ரமேஷ், திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி , வணிக சங்கத்தின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொறியாளர் ராகவன் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
கோவில்பட்டி நகரை பசுமையாகவும் தூய்மையாகவும் மாற்றுவது என்றும் பசுமை- தூய்மை இயக்கம் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சிகளை உதவி தலைமை ஆசிரியர் முருக சரஸ்வதி தொகுத்து வழங்கினார்.
கலந்தாய்வில் தொழில் முனைவோர், அரசியல் கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.







