ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தல் (2026 முதல் 2029 வரை) உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது இதில் சேகர் ஜெ மனோகரன் தலைமையிலான அணி வெற்றி பெற்று பதவியேற்றது இந்த அணியில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி மாநில தேர்தல் குழு தலைவர் ஆகவும், பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா மாநில ஆக்கி போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் பதவி ஏற்றனர்.

இவர்களை முன்னாள் மாநில ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் செல்லதுரை அப்துல்லா மற்றும் முன்னாள் இந்திய ஆக்கி ஒலிம்பிக் வீரர் திருமாவளவன் மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம் முன்னாள் இந்தியஆக்கி வீரர் அஸ்வின், பொறுப்பாளர்கள் மாரியப்பன் ,சுரேந்தர் , சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவா ஆனந்த், காளிதாஸ், மாயாண்டி, ஈஸ்டர், சிவசூரியன், தூத்துக்குடி மாவட்ட நடுவர் சங்கத் தலைவர் திருச்செல்வம், மற்றும் பலர் பாராட்டினர்








