• March 6, 2026

மாசி மகம் : கழுகுமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்; மலையை சுற்றி கிரிவலம்

 மாசி மகம் : கழுகுமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்; மலையை சுற்றி கிரிவலம்

Oplus_16908288

 கோவில்பட்டி அருகே  தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோவிலில் மாசி மகம் திருவிழாவை யொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகமும், திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜைகள் நடந்தது.

மதுரை, ராஜபாளையம், சிவகாசி, தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களி லிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  மலையை சுற்றி கிரிவலம் வந்து பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து கழுகாசலமூர்த்தியை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் பால்குடம் எடுத்தும், நீள அலகு குத்தியும், காவடி சுமந்தும்நேர்ச்சை செலுத்தினர். கோவிலில் சிறப்பு அபிஷேகமும், உச்சி காலப் பூஜையும் நடந்தது.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி கழுகாசலமூர்த்தியை தரிசனம் செய்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *