• March 6, 2026

மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கியது திமுக

 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கியது திமுக

Oplus_16908288

திமுக தலைமை கழகம் தலைவர் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்ப தாவது:-

மாநிலங்களவைத் தேர்தல் – 2026 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இன்று (3-3-2026) கலந்து பேசினர்.

இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த குழுவினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் குழுவினரும் கலந்துபேசி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்திட தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *