• March 6, 2026

திமுக -காங்கிரஸ் தொகுதி உடன்பாடு சிக்கல் தீருமா? முதலமைச்சர் ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு

 திமுக -காங்கிரஸ் தொகுதி உடன்பாடு சிக்கல் தீருமா? முதலமைச்சர் ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு

Oplus_16908288

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியில் ஒதுக்குவதில் இழுபறி நிலை நீடிக்கிறது. காங்கிரஸ்தொகுதி பங்கீட்டு குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தையில் கூடுதல் தொகுதிகள் கேட்பதால் திமுகவிடமிருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை.

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று (3.3.2026) நேரில் சந்தித்துப் பேசினார். 

அதாவது திமுக – காங்கிரஸ் இடையே நிலவி வரும்  தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் தமிழக காங்கிரஸ்  தலைவர் செல்வப்பெருந்தகை உடன் இருந்தார்.i

இதற்கிடையே தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை அறிவிக்க இன்று காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. முன்னதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது ப. சிதம்பரம் நேரடியாக முதல்வரைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது 29 சட்டமன்றத் தொகுதிகள் 2 ராஜ்யசபா இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்க திமுக முன் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் 39 சட்டமன்ற தொகுதிகள் என்பதில் இருந்து இருந்து சற்று இறங்கி வந்த காங்கிரஸ் 36 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், இந்த சந்திப்பிற்குப் பிறகு, திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் . செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது :-

, “தகவல் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. கூட்டணி குறித்துப் பேசிக் கொண்டு  இருக்கிறோம். இது தொடர்பாகப் பேசி முடித்த பிறகு சொல்வோம். திமுகவில் இருந்து எவ்வித கெடுவும் விதிக்கவில்லை. . இதில் யூகங்களுக்கோ அல்லது பேச்சுவார்த்தைகளுக்கோ இடமில்லை. அனைத்தும் சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. நான் கட்சியின் ஒரு தொண்டன் (சிப்பாய்). கட்சியின் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைப் பின்பற்றுவேன். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்கும்”

 இவ்வாறு செல்வ பெருந்தகை தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *