• May 9, 2024

கோவில்பட்டி ஏ.வி. மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்துக்கு ஐ.எஸ்.ஓ.தரச்சான்றிதழ்

 கோவில்பட்டி ஏ.வி. மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்துக்கு ஐ.எஸ்.ஓ.தரச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் செயல்படும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ .தரச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் சென்னைதனியார் . நிறுவனத்தினர் இன்று (31.10.2023) வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது:-

 மத்திய அரசின் மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (MME) திட்டத்தின் கீழ் 100 சத்துணவு மைங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு Quest Certification (P) Ltd. என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ . 9001-2015 தரச்சான்றிதழ்களை வழங்குவதற்காக 3 கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து மையங்களுக்கும் சான்றிதழ்கள் வழங்க தயார் நிலையில் உள்ளதாக அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 2019-2020-ஆம் ஆண்டிற்கு ஐ.எஸ்.ஓ . 9001-2015 தரச்சான்று வழங்குவதற்காக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடன்குடி ஊராட்சி ஒன்றியம் உடன்குடி, அரசு நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், கோவில்பட்டி ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளி சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டன. 

தேர்வு செய்யப்பட்டட சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ . 9001-2015 தரச்சான்றிதழ்களை சென்னை நிறுவனத்தினர் இன்று என்னிடம் வழங்கினர். அதை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் நான் வழங்கினேன் .

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆ.ஹேமலதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *