• May 9, 2024

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் கோவில்பட்டி அன்னபாரதி

 பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் கோவில்பட்டி அன்னபாரதி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி நடைபெற்று வருகிறது. 18 பேருடன் தொடங்கிய  ஆட்டத்தில் 3 பேர் வெளியேறி   இருந்த  நிலையில் நேற்று இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர்.

யுகேந்திரன், வினுஷா ஆகியோர் எவிக்ட் ஆனதை தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

டெலிவிஷன் நடிகர் தினேஷ், பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி, வி.ஜே. மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனா, ஆர்.ஜே. பிராவோ, கானா பாடகர் பாலா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதால் மீண்டும் போட்டியாளர்கள் எண்ணிக்கை 18 ஆகி உள்ளது.

இவர்களில் பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி கோவில்பட்டியை சேர்ந்தவர். புத்தக வாசிப்பாளரும் கூட…

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது பற்றி அறிமுக வீடியோவில் , “உங்களுக்குள்ள நிறைய திறமைகள் இருக்கு. அதை ஏன் வெளியில் காட்டக்கூடாது என்று நண்பர்கள் கேட்பார்கள். பிக் பாஸ் மேடையை அதற்காக பயன்படுத்திக் கொள்வேன். காமெடியா மட்டும் இல்ல… கருத்தாகவும் பேசுவேன். வீட்டை ஜாலியா வைத்துகொள்வேன்” என்று அன்னப்பாரதி  குறிப்பிட்டு இருந்தார்.

பிறகு மேடையில் கமல்ஹாசனை  சந்தித்து திரைப்பட டைட்டில்களை வரிசையாக வைத்து அவர் கவிதையாக சொல்லி கைதட்டலை பெற்றார்.

கார்டன் ஏரியாவில் மைக் வைத்து பட்டிமன்ற செட்டப் மாதிரி போடப்பட்டிருந்தது. மேடையில் நின்று ஒவ்வொரு போட்டியாளரை பற்றியும் அன்னபாரதி சொன்ன கருத்துகள் ரசிக்கும்படி  இருந்தது.

அன்னபாரதியின் நகைச்சுவையில் ஆங்காங்கே குண்டூசி குத்தல்களும்  இருந்தன. . “இருக்கு… ஆனா இல்லை என்பது மாதிரி விளையாடாதீங்க… காதல் பரத் மாதிரி சிலரை மாத்திடாதீங்க”.. என்று அன்னபாரதி சொன்னதும் பலத்த சிரிப்பலை எழுந்தது.

அன்னபாரதி எம்.எஸ்சி, எம்.பில், எலக்ட்ரானிக்கல் படித்திருக்கிறார். முதலில் எச்.டி.எப்.சி. பேங்க்கில் ஒரு வருடம் வேலை பார்த்து இருக்கிறார். அதற்கு பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் சி.சி.ஏ.வாக வேலை பார்த்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து மக்கள் டிவியில் உரிமைக்குரல் என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருக்கிறார்.

அதை தொடர்ந்து கே டிவியில் மங்கையர் மன்றம் என்று பல பட்டிமன்றங்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் அதிகமாக மதுரை முத்துவுடன் இணைந்து பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் துபாய், சிங்கப்பூர், மலேசியா, குவைத், பக்ரைன், மஸ்கட் போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று தன்னுடைய நகைச்சுவையான பேச்சு மூலமாக பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார்.

மேலும் சன் டிவியில் காமெடி ஜங்ஷன், சண்டே கலாட்டா, லொள்ளு சபா, ஆதித்யா டிவி என்று பல டி.வி. நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று இருக்கிறார். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண் வர்ணனையாளராக அன்னபாரதி பங்கேற்று இருந்தது தான் பலரது பாராட்டையும் பெற வைத்தது.

இந்த நிலையில் தான் இவர் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *