சமுதாய பணிகள் குறித்த மாவட்ட கருத்தரங்கு; கோவில்பட்டியில் நடந்தது
![சமுதாய பணிகள் குறித்த மாவட்ட கருத்தரங்கு; கோவில்பட்டியில் நடந்தது](https://tn96news.com/wp-content/uploads/2023/10/febe5039-af72-4d04-bf5c-423396e22ce3-850x560.jpeg)
கோவில்பட்டி சவுபாக்யா மஹாலில் ரோட்டரி மாவட்ட 3212 சார்பில் சமுதாயப் பணிகள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கருத்தரங்கு சேர்மன் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கி வரவேற்றார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் சின்னத்துரை அப்துல்லா, இதயம் முத்து, ஆறுமுகப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அளவிலான கருத்தரங்கினை ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். ரோட்டரி பவுண்டேசன் மண்டல உதவி ஒருங்கிணைப்பாளர் முத்து பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/10/2baee26a-7fa9-4253-bae3-fe0cd01a0aba-1024x577.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/10/0f13a197-a643-478b-a831-13cbb5ba31a9-1024x557.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/10/96ce9f36-e76a-4ad5-b7c0-a7dffe6d9502-1024x495.jpeg)
விழாவில் 2026-27ம் ஆண்டிற்கான ரோட்டரி மாவட்ட ஆளுநராக ராமநாதபுரம் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதை ஆளுநர் முத்தையாபிள்ளை அறிவித்தார்.
ரோட்டரி மாவட்ட வருங்கால ஆளுநர் மீரான் கான்சலீம், மாவட்ட பொதுசெயலாளர் ஆறுமுகப்பெருமாள். கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து செல்வம், சரவணன், சீனிவாசன், டாக்டர் சம்பத்குமார் மற்றும் கன்னியாகுமரி,விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
முன்னதாக விஜய் டிவி புகழ் டி.எஸ்.கே., அசார் ஆகியோரின் கலக்கல் காமெடி நிகழ்ச்சி நடந்தது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)