116 வது ஜெயந்திவிழா: கோவில்பட்டியில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116 வது ஜெயந்திவிழா இன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் அரசியல் கட்சியினர்,தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கோவில்பட்டி மத்திய பகுதி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் வடக்கு திட்டங்குளத்தில் அமைந்துள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், மாநில கலைத்துறை துணை அமைப் பாளர் கோடையடி ராமச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.முத்துப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி லியோ செண்பகராஜ், வார்டு செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு ஒன்றிய செயலாளர் சி.சரவணன் செய்து இருந்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக கோவில்பட்டி நகரகழகம் சார்பில் நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன் தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் மலைராஜ் முன்னிலையில் தேவர்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, நகர நிர்வாகிகள் பாபு,தவசி,பாலு, மதிமுத்து,ஆழ்வார் கணேசமூர்த்தி, தங்கப்பாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, ஒன்றிய செயலாளர் ஆனிமுத்துராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் அய்யாதுரை பாண்டியன்,ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ஐயாத்துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தேவர் திருவுருச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமை வகித்தார். சுபேதார் கருப்பசாமி மற்றும் மேனாள் நூலக ஆய்வாளர் பூல்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர். ஆ.சம்பத்குமார் மாலையணிவித்தார்.
நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகி கலைச்செல்வன், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் ரவிக்குமார், , நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்கத்தலைவர் செண்பகம், தமிழ்நாடு காமராஜர் பேரவையின் நாஞ்சில் குமார், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் காளிதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.