தேசிய ஒற்றுமை தினம்: மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
![தேசிய ஒற்றுமை தினம்: மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு](https://tn96news.com/wp-content/uploads/2023/10/nationalunitiday-1.jpg)
நாடு முழுவதும் அக்டோபர் -31ம்தேதி (இன்று) இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டது.. கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பட்டேலின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்..பின்னர் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், விவேகானந்த கேந்திரத்தின் பண்பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். பள்ளி குழு உறுப்பினர் ராஜா அமரேந்திரன், முன்னாள் மாணவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை செல்வி வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள் சாந்தினி, விஜய பொன்ராணி, கனகலட்சுமி, ஜெயலட்சுமி, ஜெப அகிலா, கணேசன், ராதாகிருஷ்ணன், மகாராஜா, ஆகாஷ் உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர், பள்ளி ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)