• May 9, 2024

கோவில்பட்டி அருகே 70 வருட ஆக்கிரமிப்பு  சுவர்கள் அகற்றம்

 கோவில்பட்டி அருகே 70 வருட ஆக்கிரமிப்பு  சுவர்கள் அகற்றம்

தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இளயரசனேந்தல் குறுவட்டம் வடக்கு பட்டி கிராமத்தில் உள்ள சாலையை மறித்து சுவர்கள் மற்றும் தெருவின் நடுவில் தென்னை மரங்கள் நடப்பட்டு இருந்தன. ஒரு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த பாதையை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக சிலர் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த  கடந்த 70 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவர்களும் தெருவின் நடுவில் நட்டப்பட்ட மரங்களும் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றுவதற்கு  வருவாய்துறை நடவடிக்கை  மேற்கொண்டது. இன்று காலை. மேற்படி  சாலையில் உள்ள சுவர்களையும் மரத்தையும் ஜே.சி.பி.எந்திரம் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கோவில்பட்டி தாசில்தார் லெனின், துணை தாசில்தார்கள் , குருவிகுளம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம நிர்வாக நிர்வாக அலுவலர், தலையாரி உள்ளிட இதர வருவாய்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. கோவில்பட்டி மேற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் பல தாக்கீது அனுப்பியும் , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எவவித நடவடிக்கையும் எடுக்காததால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்பேரில் கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தாக்கீது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பேரில் தான் இந்த ஆக்கிரமிப்பு சுவர்கள் அகற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஐந்தாவது தூண் அமைப்பு பாராட்டு தெரிவித்து இருப்பதுடன் மறுபடியும் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *