கோவில்பட்டி மந்திதோப்பு ஸ்ரீமன் நாராயணசாமி நிழல்தாங்கல் திருக்காட்சி திருவிழாகொடியேற்றம்
கோவில்பட்டி மந்திதோப்பு கணேஷ் நகரில் உள்ள சீமான் அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி நிழல்தாங்கல் 39வது திருக்காட்சி திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி இன்று 31.5.2024 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது,
அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, விழாவில் அய்யா வழி பணிவிடையாளர்கள் சூரியநாராயணன்,மாரிமுத்து,வெங்கடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,
வருகிற 7.6.2024 மாலை 5 மணிக்கு அய்யாவிற்கு சிறப்பு பணிவிடை பூஜையும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும்,இரவு 10மணிக்கு அய்யாவின் பக்திபாடல் கச்சேரியும் நடைபெறுகிறது,
9.6.2024ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5மணிக்கு திருப்பள்ளி எழுச்சி,காலை 9 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு பீமகுண்ட ஜல கணபதி திருக்கோவிலில் இருந்து அய்யா சந்தனக்குடம் கட்டி வாகன பவனி நடைபெறுகிறது.