தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம்
![தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2024/05/elemeet.jpg)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.5.2024) பாராளுமன்ற பொது தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ந் தேதி நடைபெற இருக்கும் சூழலில் வாக்க்குசாவடி முகவர்களை நியமனம் செய்வது குறித்தும்,மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு , தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)